sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 

/

விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 

விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 

விபத்தில் இறந்தவருக்கு ரூ.50 லட்சம்; காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு 


ADDED : அக் 18, 2024 06:18 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மோதிராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார்,55; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கணபதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 50 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு பாலிசி எடுத்து இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2022, ஜூன், 28ல், பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்குடன் மோதியதில் படுகாயமடைந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் விபத்து காப்பீட்டு தொகை வழங்க கோரி, அவரது மனைவி தெய்வநாயகி மற்றும் இரு மகள்கள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால், செல்வகுமார் மதுபோதையில் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டதாக கூறி, இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது.

பாதிக்கப்பட்ட செல்வகுமாரின் குடும்பத்தினர், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு: செல்வகுமார் விபத்தில் சிக்கி இறப்பதற்கு, மதுபோதை தான் காரணம் என்பதற்கான மருத்துவ ஆவணங்கள், எதிர்மனுதாரர்கள் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. விபத்துக்குள்ளானவர் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் இருதய அடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தெரியவருகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதியாகியுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு விபத்து காப்பீட்டு தொகை, 50 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us