/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கலுக்கு 50 சிறப்பு பஸ்கள் மக்கள் நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
/
பொங்கலுக்கு 50 சிறப்பு பஸ்கள் மக்கள் நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
பொங்கலுக்கு 50 சிறப்பு பஸ்கள் மக்கள் நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
பொங்கலுக்கு 50 சிறப்பு பஸ்கள் மக்கள் நெரிசல் தவிர்க்க ஏற்பாடு
ADDED : ஜன 07, 2025 10:56 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சியில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடும் நிலையில், பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அதிகம். இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். நெரிசலை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அவ்வகையில், வரும், 10ம் தேதி முதல், 14ம் தேதி வரை, தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, பொள்ளாச்சியில் இருந்து, கோவை வழித்தடம் வாயிலாக, திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், பழநி மார்க்கமாக மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு, என, மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சிறப்பு பஸ்களின் இயக்கம், 10ம் தேதி துவங்கும். டிரைவர்கள், அவரவர் விருப்பத்தின் பேரில், தொலைதுார ஊர்களுக்கு பஸ்சை இயக்க அனுமதிக்கப்படுவர்.
இதேபோல, சொந்த ஊர் திரும்பிய மக்கள், பொங்கல் முடிந்து, மீண்டும் திரும்புவர் என்பதால், பழநி மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
குறிப்பாக, பயணியர் கூட்டத்துக்கு ஏற்ப, தேவையான வழித்தடங்களில் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.பொள்ளாச்சி பகுதியில் தென்மாவட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதேபோன்று, சென்னை, பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு அதிகப்படியான பயணியர் வருகின்றனர். அதற்கேற்ப, கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.