தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாட்டுக்கோழி பண்ணை அமைக்க   50 சதவீத மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க   50 சதவீத மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க   50 சதவீத மானியம்


ADDED : செப் 14, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சிறிய அளவிலான, 250 நாட்டுக்கோழிகளுடன் கூடிய பண்ணைகள் அமைக்க, 3 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழிகள் இலவசமாகவும், பண்ணை அமைக்கவும், நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவுக்கும் ரூ.1.46 லட்சம் மானியம் வழங்கப்படும்.

பயன்பெறுபவர்கள் கிராமப்பகுதியில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும், குறைந்தபட்சம் 625 சதுர அடி சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திட்டத்தில் 30 சதவீத தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 26ம் தேதிக்குள், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us