/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா
/
அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா
ADDED : ஜன 18, 2025 12:08 AM

அன்னுார், ;திருமுருகன் அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா நடந்தது.
அன்னுார் திருமுருகன் அருள்நெறிக் கழகம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பொன்விழா மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதையடுத்து, சண்முகார்ச்சனை நடந்தது.
திருமுருகன் அருள்நெறி கழக நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். குருசாமி ரங்கசாமி, கட்டளைதாரர்கள், உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.