/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56 ஆயிரம் மரக்கன்றுகள் ரெப்கோ வங்கி திட்டம்
/
56 ஆயிரம் மரக்கன்றுகள் ரெப்கோ வங்கி திட்டம்
ADDED : நவ 20, 2024 10:18 PM

வால்பாறை; மத்திய அரசின் திட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில், ரெப்கோ வங்கி சார்பில் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ரெப்கோ வங்கியின், 56வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, வங்கி சார்பில் மத்திய அரசின் 'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தும் விழா, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். ரெப்கோ வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் 'எக் பெட் மா கே நாம்' (அம்மாவின் பெயரில் ஒரு மரம்) திட்டத்தின் கீழ், ஐந்து மரங்களை நடவு செய்து, வங்கி தலைமை மேலாளர் மேரிடாய்சி, பேசியதாவது:
இத்திட்டத்தின் கீழ், 56,000 மரக்கன்றுகளை வழங்கவுள்ளோம். வால்பாறையில், அடுத்த கட்டமாக வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளோம். மரங்களை மாணவர்கள் தாயை போன்று நேசிக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பதின் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.

