/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமரச தீர்வு மையத்தில் 59 வழக்கு விசாரணை
/
சமரச தீர்வு மையத்தில் 59 வழக்கு விசாரணை
ADDED : ஆக 20, 2025 12:54 AM
கோவை; நீதிமன்றங்களில் வழக்கு தேக்கம் குறைக்க, கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில், சிறப்பு தேசிய சமரச தீர்வு முகாம், ஜூலை 1ல் துவக்கப்பட்டது; செப்., 30 வரை நடக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகள் இவ்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட, 59 வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இரு தரப்பினர், அவரவர் வக்கீலுடன் ஆஜராகினர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவி வக்கீல்கள் சமரச பேச்சு நடத்தினர்.