/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 63 வயது கைதி 'பாஸ்'; உடன் எழுதியோரும் தேர்ச்சி
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 63 வயது கைதி 'பாஸ்'; உடன் எழுதியோரும் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில் 63 வயது கைதி 'பாஸ்'; உடன் எழுதியோரும் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வில் 63 வயது கைதி 'பாஸ்'; உடன் எழுதியோரும் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:25 AM
கோவை : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 44 பேர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இதில், 63 வயதான கைதி ஒருவர் 253 மதிப்பெண் பெற்று அசத்தல்.
கோவை மத்திய சிறையில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என, 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக சிறைச்சாலையில், யோகா, கல்வி, தொழிற்பயிற்சி, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், குற்றங்கள் செய்து சிறையில் தண்டனை அனுபவித்து வருவோருக்கு, கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தேர்வு, 10ம் வகுப்பு தேர்வு மற்றும் பிளஸ்2 தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு கோவை மத்திய சிறைக்கைதிகள் 44 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரபு என்ற கைதி 361 மதிப்பெண், அரவிந்த் குமார் 333, சிவபிரகாஷ், விஸ்வநாதன் 319 மதிப்பெண் பெற்று, சிறைக்கைதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
இதேபோல், 63 வயதான கைதி மகேஸ்வரன், 253 மதிப்பெண்களும், 51 வயதான டித்தோட் குமார், 307 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து கைதிகளையும், சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி மற்றும் கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தில் குமார் ஆகியோர் பாராட்டினர்.