ADDED : ஜூன் 25, 2026 02:02 AM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், காருண்யா நகர், ஆலாந்துறை, பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, கே.ஜி.சாவடி ஆகிய 7 போலீஸ் ஸ்டேஷன்களில், நேற்று காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை, அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், பொது குறை தீர்ப்பு முகாம் நடந்தது.
நிலத்தகராறு, பழைய வழக்குகள் மொத்தம், 150 மனுக்கள் பெறப்பட்டன. 65 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இனி வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில், பொது குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
