ADDED : ஜூன் 25, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
கோவை; குனியமுத்துார் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நுண்ணறிவு பிரிவிற்கும், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் சிறப்பு நுண்ணறிவு பிரிவிற்கும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா நுண்ணறிவு பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் குனியமுத்துார் ஸ்டேஷனுக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராகிம் பாதுஷா நுண்ணறிவு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர். நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக பொறுப்பேற்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
