ADDED : ஜூன் 19, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
கோவை: அரசு மருத்துவமனையில், 2 ஆண்டுக்கு முன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு திறக்கப்பட்டது. ஆனால், அதில் வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை.
எனவே, 50 ஆண்டுக்கு மேல் பழமையான புறநோயாளிகள் பிரிவு இயங்கும் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட முடிவு செய்தனர். அங்குள்ள துறைகள் வேறு இடத்திற்கு மாற்றும் வேலைகள் நடக்கின்றன.
சமீபத்தில் அதை பார்வையிட்ட பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அடுத்த 50 ஆண்டுகள் தேவையை சமாளிக்கும் வகையில், பெரிதாக கட்ட இருப்பதாக கூறினார். அதற்கான வரைபடம் வேகமாக தயார் ஆவதாக அதிகாரிகள் கூறினர்.
”500 படுக்கைகளுடன் விரிவான பார்க்கிங் வசதியுடன் 7 மாடி கட்ட வரைபடம் தயாரித்து அனுப்புவோம். விரைவாக அரசிடம் ஒப்புதல் கிடைக்கும்என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
