/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டுதாரர்களிடம் 70 சதவீதம் கைரேகை பதிவு
/
ரேஷன் கார்டுதாரர்களிடம் 70 சதவீதம் கைரேகை பதிவு
ADDED : மார் 01, 2024 12:12 AM
பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், 70 சதவீத ரேஷன் கார்டுதாரர்களிடம், கைரேகை பதிவு செய்யப்பட்டு விட்டதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையை வரன்முறைப்படுத்த, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கைரேகையையும், பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
கடந்த, 1ம் தேதி துவங்கிய இந்த பணியை, இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, வழங்கல் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதுவரை, பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழயிர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாதம், பொதுவினியோக திட்ட பொருட்கள் வழங்கும் போது, விடுபட்டவர்களின் கைரேகையை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:
கைரேகை பதிவு பணியை, இம்மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இதுவரை 70 சதவீதம் கார்டு உறுப்பினர்களின் கைரேகை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல ரேஷன் கார்டுகளில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. இந்த கைரேகை பதிவு முடிந்த பிறகு, நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவரும். பலருக்கு கைரேகை பதிவு விழுவதில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். அதன் பின், மீதமுள்ள பதிவு இன்னும் 10 நாட்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

