/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜமீன் ஊத்துக்குளியில் 715 மனுக்கள் ஒப்படைப்பு
/
ஜமீன் ஊத்துக்குளியில் 715 மனுக்கள் ஒப்படைப்பு
ADDED : நவ 13, 2025 09:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஜமீன் ஊத்துக்குளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 715 மனுக்கள் பெறப்பட்டன.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி துவக்கி வைத்தார். துணை தலைவர் சையது அபுதாஹீர், வருவாய்துறை அதிகாரிகள், செயல் அலுவலர் மங்களேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மொத்தம், 715 மனுக்கள் பெறப்பட்டன. அதில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 301 மனுக்கள் பெறப்பட்டன. 82 மனுக்கள் மீது உடனடி தீர்வு செய்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

