/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
76வது குடியரசு தினம்; கோலாகலமாக கொண்டாட்டம்
/
76வது குடியரசு தினம்; கோலாகலமாக கொண்டாட்டம்
ADDED : ஜன 28, 2025 07:54 AM

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், தன்னார்வ அமைப்பினர், என, பலரும், 76வது குடியரசு தின விழாவைக் கோலாகலமாக கொண்டாடினர்.
* பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளையில் நடந்த விழாவுக்கு, பாரதி படிப்பகத்தில் தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஞானசேகர் வரவேற்றார். பொள்ளாச்சி நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மூர்த்தி, கொடி ஏற்றினார்.
* நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் சித்திராதேவி, கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் தருமராஜ், உறுப்பினர்கள் ஜெயலாப்தீன், காளிமுத்து, கவிஞர் முருகானந்தம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஆனைமலை கிளை நுாலகத்தில் நடந்த விழாவில், வாசகர் வட்ட தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். நுாலகர் மீனாகுமாரி, கொடி ஏற்றினார். பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்யவும், அவர்களை உறுப்பினர்களாக்கவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
* தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் கணேசன் கொடி ஏற்றினார். நடப்பு கல்வியாண்டு, இரண்டாம் பருவத்தில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த 5 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அய்யம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோவை தெற்கு மாவட்ட வீடு, நிலம், வீட்டுமனைகள் விற்பனை ஆலோசகர் சங்கத்தினர், வால்பாறை ரோடு தனியார் திருமண மண்டபத்தில் குடியரசு தின விழா கொண்டாடினர். சங்கத் தலைவர் சாகுல்அமீது, கொடி ஏற்றினார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் பாலு, செயலாளர் தனேந்திரன், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
* திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூளேஸ்வரன்பட்டியில் நடந்த விழாவில், பேரூராட்சி கட்சி தலைவர் வீராசாமி, கொடி ஏற்றினார். கிழக்கு வட்டாரச் செயலாளர் பெரியசாமி, வக்கீல் செல்வக்குமார், மாவட்ட தலைவர் தென்னரசு, பொருளாளர் கொச்சப்பன், துணைத் தலைவர் நடராஜ், பொதுச்செயலாளர் ஆறுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த விழாவில், மாவட்ட தலைவர் பகவதி கொடி ஏற்றினார். கட்சியினர் ஊர்வலமாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை
* உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் விஜயா கொடி ஏற்றினார். உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆரியா மாணவியரை ஊக்குவித்து பேசினார்.
* ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் தங்கவேல் கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழுவினர் முன்னிலை வகித்தனர். முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆசிரியர் கல்பனா நன்றி தெரிவித்தார்.
* பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சண்முகப்ரியா கொடி ஏற்றினார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், பழனியாண்டவர் நகர் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் பங்கேற்றனர்.
* உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் பிரகாஷ், உடற்கல்வி இயக்குனர் சண்முகராஜா, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
வாகன ஊர்வலம்
உடுமலையில், பா.ஜ., கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள் சார்பில், தேசிய கொடியுடன், இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது. எஸ்.வி.,புரம், கணேசபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா, மாவட்ட செயலாளர் வடுகநாதன், ஒன்றிய தலைவர்கள் சுப்பிரமணியம். லோகேஷ் குமார், மதிவாணன், பாப்பு சாமி, கல்யாண சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
* கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்விராணி கொடியேற்றினார். பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் முக்கிய தலைவர்கள் வேடமணிந்து வந்தனர். பேச்சுப்போட்டி நடந்தது.
* மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மேலாண்மை குழு தலைவர் திவ்யா தலைமையில் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் கொடியேற்றினார். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்திற்கான வேறுபாடு மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்கள் பாட்டு பேச்சு மற்றும் கவிதை போட்டியில் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர்கள் உருவப்படத்துடன் முகமூடியை மாணவர்கள் அணிந்து வந்தனர்.
* காளியம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அழகேசன் தலைமையில் விழா நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்ற பரிசுகளும் விளையாட்டுப் போட்டி பரிசுகளும் வழங்கப்பட்டது.
-நிருபர் குழு-