sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 77வது குடியரசு தின விழா கோலாகலம்

/

 77வது குடியரசு தின விழா கோலாகலம்

 77வது குடியரசு தின விழா கோலாகலம்

 77வது குடியரசு தின விழா கோலாகலம்


ADDED : ஜன 27, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 77-வது குடியரசு தின விழா வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சமாதானத்தை போற்றும் வகையில் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

313 சான்றிதழ்கள் நிர்வாகம் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.காவல்துறையினர் 122 பேர், வருவாய்த் துறையினர் 34 பேர், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் 30 பேர், இதர துறைகளை சேர்ந்த அலுவலர்கள் 127 பேர் என மொத்தம் 313 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டம் மற்றும் மொழிப் போர் தியாகிகளின் வாரிசுதாரர்கள் 11 பேருக்கும் கலெக்டர் மரியாதை செலுத்தினார்.

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயன்று உயிர்நீத்த, மத்திய அரசின் 'பால் புரஸ்கார்' விருது பெற்ற சிறுமி வியோமா பிரியாவின் பெற்றோரும் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 'பேக்' பரிசாக வழங்கப்பட்டது.

மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, மாவட்டபள்ளிக்கல்வித் துறை சார்பில் 755 மாணவ -மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கொங்கு மண்டலத்தின்பாரம்பரிய நடனமான 'வள்ளி கும்மி'யை பொள்ளாச்சி மாரியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வழங்கினர்.  கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்களின் 'தமிழை மீட்போம்' நடனம் ஆகியவை கவர்ந்தன.  அன்னூர் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் வீர மங்கை நடனம், மசக்காளிப்பாளையம் நடு நிலைப்பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு, கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் 'மரங்களை காப்போம்' போன்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.  சமூக நல விடுதி மாணவிகளின் தற்காப்புக் கலை, பரதம், சிலம்பம், நாட்டுப்புற நடனங்கள் என மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.








      Dinamalar
      Follow us