தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 78வது பட்டய கணக்காளர் தினம் கொண்டாட்டம்

 78வது பட்டய கணக்காளர் தினம் கொண்டாட்டம்

 78வது பட்டய கணக்காளர் தினம் கொண்டாட்டம்


ADDED : ஜூலை 02, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளை சார்பில், 78வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

விழாவின் ஒருபகுதியாக, மரக்கன்று நடுதல், ரத்த தான முகாம் மற்றும் 750க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. 30 ஆண்டு நிறைவு செய்த மூத்த பட்டய கணக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

ஐ.சி.ஏ.ஐ., கோவை கிளை தலைவர் சுர்வஜித் கிருஷ்ணன் கூறியதாவது:

துடியலுார், ஐ.சி.ஏ.ஐ., பவனில், சி.ஏ., மாணவர்களுக்கான நவீன வகுப்பறை செயல்படுகிறது. 9,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில்முறை திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆண்டு முழுக்க பயிற்சி வகுப்புகள், தேர்வு வழிகாட்டல் முகாம்கள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இத்துடன், புதிய வருமான வரிச் சட்டம், ஜி.எஸ்.டி. நிறுவனச் சட்டம், செயற்கை நுண்ணறிவு, தணிக்கை, கணக்கியல் தரநிலைகள் பற்றி உறுப்பினர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

விழாவில், தென்னிந்திய ஆடிட்டர்கள் சங்க தலைவர் வெங்கடேஷ், ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us