/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய டெக்ஸ்டைல் சங்கத்தின் 78வது ஜவுளி தொழில் மாநாடு
/
இந்திய டெக்ஸ்டைல் சங்கத்தின் 78வது ஜவுளி தொழில் மாநாடு
இந்திய டெக்ஸ்டைல் சங்கத்தின் 78வது ஜவுளி தொழில் மாநாடு
இந்திய டெக்ஸ்டைல் சங்கத்தின் 78வது ஜவுளி தொழில் மாநாடு
ADDED : நவ 23, 2025 05:38 AM

கோவை: இந்திய டெக்ஸ்டைல் சங்கம் சார்பில், 78வது ஜவுளி தொழில் மாநாடு, கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது.
மாநாட்டில் இந்திய டெக்ஸ்டைல் சங்க தலைவர் சத்திய நாராயணா வரவேற்று பேசினார்.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு பேசியதாவது:
இந்திய ஜவுளித்துறை மிகவும் சிக்கலானது. நம்பிக்கை, பங்குதாரர், மதிப்புகளை கொண்டு நடக்கிறது. சர்வதேச அளவிலும் ஏற்படும் சவால்களுக்கு இடையே, இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. 3வது மாபெரும் பொருளாதார நாடாக மாற்றம் பெற செயல்பட்டு வருகிறது. மாறி வரும் உலகிற்கு ஏற்ப, தொழில்நுட்ப வல்லுனர்கள், மூலப்பொருட்களை ஆராய்ந்து, இயந்திரங்களை அதற்கு ஏற்ப தயாரிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு, சஞ்சய் ஜெயவர்த்தனவேலு பேசினார்.
துவக்க விழாவில், சிட்ரா நிர்வாக குழு துணை தலைவர் ராஜ்குமார், இந்திய டெக்ஸ்டைல் சங்க தேசிய தலைவர் படேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய டெக்ஸ்டைல் சங்கத்தின் செயலாளர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.
இரண்டு நாள் கருத்தரங்கில், நேற்று ஜவுளித்துறையில் உள்ள சவால்கள், சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதங்கள் நடந்தன.
திறம்பட செயல்பட்ட ஜவுளி தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.

