/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 15, 2025 11:01 PM
கோவை: ரயிலில் கடத்தி வரப்பட்ட எட்டு கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் அடிக்கடி ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில், கோவை ரயில்வே போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பின்பக்க பொதுஜன பெட்டியில் ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்த போது, அதில் சுமார் எட்டு கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் அதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.