/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
/
8 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
ADDED : பிப் 13, 2025 11:32 PM

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மதியம் சோமனூர் அடுத்த ஆத்துப்பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், எட்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இரு கார்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் கஞ்சா கடத்தி விற்க வந்த சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா, 42, கேரளாவை சேர்ந்த ஜூனோத் அலி, 40, ஹிபாதுலா, 36 ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம், கஞ்சா எங்கிருந்து கடத்தப்படுகிறது, எங்கு விற்கப்படுகிறது என, போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.