/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் பணியிட மாற்றம்
ADDED : பிப் 20, 2025 10:22 PM
பொள்ளாச்சி; கோவை மாவட்ட போலீசில் பணியாற்றி வந்த எட்டு இன்ஸ்பெக்டர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த எட்டு போலீஸஅ இன்ஸ்பெக்டர்களை, இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கருமத்தம்பட்டியில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஏ.சுமதி, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.சுமதி திருப்பூர், பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தொண்டாமுத்துார் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, தொண்டாமுத்துர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, ஆனைமலை இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.