/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் கடந்த 10 மாதங்களில் விபத்துகளில் 851 பாதசாரிகள் பலி
/
கேரளாவில் கடந்த 10 மாதங்களில் விபத்துகளில் 851 பாதசாரிகள் பலி
கேரளாவில் கடந்த 10 மாதங்களில் விபத்துகளில் 851 பாதசாரிகள் பலி
கேரளாவில் கடந்த 10 மாதங்களில் விபத்துகளில் 851 பாதசாரிகள் பலி
ADDED : நவ 23, 2025 06:44 AM
பாலக்காடு: கேரளாவில் இந்த ஆண்டு, அக். மாதம் வரை நடந்த விபத்துகளில், 851 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக, கேரளா போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், சாலை விபத்துகளை தவிர்க்க போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். முகாமை முன்னிட்டு, கேரள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு அக்., மாதம் 31ம் தேதி வரை நடந்த விபத்துகளில், 851 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில், சாலையை கடக்கும் பகுதியில் நடந்த விபத்துகளில் 218 பாதசாரிகள் உயிரிழந்துள்ளளனர்.
வாகன விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழப்பு எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் நடக்கும் இந்த முகாமில், இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 760 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 32,116 வாகனங்கள் சோதனை செய்ததில், 182 வழக்குகள் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டன.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மேலாண்மையின் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதிகளில் வேகம் குறைக்காத வாகனங்கள், அதிவேகமாக இயக்கிய வாகனங்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

