/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளமடை முகாமில் 894 பேர் மனு
/
வெள்ளமடை முகாமில் 894 பேர் மனு
ADDED : செப் 19, 2025 09:20 PM
கோவில்பாளையம்; வெள்ளமடையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 894 பேர் மனு அளித்தனர்.
அன்னுார் தாலுகாவில், வெள்ளமடை ஊராட்சி பொதுமக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. டாஸ்மாக் கோவை வடக்கு மாவட்ட மேலாளர் சீனிவாசன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை கோரி 318 பேர் மனு அளித்தனர். நில அளவை, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், இறப்பு சான்று, வாரிசு சான்று ஆகியவற்றுக்காக வருவாய்த் துறையில் 326 பேர் மனு அளித்தனர். மொத்தம் 17 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
11 துறைகளில் மொத்தம் 894 மனுக்கள் பெறப்பட்டன. ஆறு துறைகளில் ஒரு மனு கூட பெறப்படவில்லை.
சுகாதாரத் துறையில் 120 பேர் பரிசோதிக்கப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன. 38 பேருக்கு ஆதார் திருத்தம் செய்து தரப்பட்டது. வேளாண்துறை சார்பில் இரண்டு பேருக்கு இடுபொருள் வழங்கப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.