/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாம் முறை வீதிமீறலில் ஈடுபட்ட 941 வாகனம் பறிமுதல்
/
இரண்டாம் முறை வீதிமீறலில் ஈடுபட்ட 941 வாகனம் பறிமுதல்
இரண்டாம் முறை வீதிமீறலில் ஈடுபட்ட 941 வாகனம் பறிமுதல்
இரண்டாம் முறை வீதிமீறலில் ஈடுபட்ட 941 வாகனம் பறிமுதல்
ADDED : அக் 16, 2024 10:14 PM
கோவை: கோவையில், தொடர் போக்குவரத்து வீதிமீறலில் ஈடுபட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
கோவை மாநகர போலீஸ் சார்பில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையில், அதிவேகமான வாகனங்களை இயக்குவோர், போக்குவரத்து விதிகளை மீறி செல்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
தற்போது, மாநகரில் உள்ள, 65 ஹாட்ஸ்பாட்களில் தொடர் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலீசார் விதிமீறும் வாகனங்களை தங்களின் மொபைல் போனிலும் புகைப்படும் எடுத்து, வழக்கு பதிவு செய்கின்றனர். இதுதவிர, ஐ.டி.எம்.எஸ்., எனப்படும் கேமராக்கள் மூலாகவும், வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால், இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் ஆக., 31ம் தேதி வரை பதியப்பட்டுள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 710 வழக்குகளில், ரூ. 22 கோடியே 03 லட்சத்து 60 ஆயிரத்து 580 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் ரூ. 4.5 கோடி மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார், 17 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவையில் உள்ளது.
நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க, போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, அபராதம் விதிக்கப்படுகிறது.
அதை செலுத்தாமல், இரண்டாம் முறை விதிமீறலில் ஈடுபட்டு போலீசிடம் பிடிபடும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்தாண்டு ஜன., மாதம் முதல் நேற்று வரை மாநகரில் இரண்டாம் முறை விதிமீறலில் ஈடுபட்ட 941 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சத்து 15 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.