/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
94ஏ அண்ணா நகர் வருவதில்லை; கலெக்டரிடம் மக்கள் முறையீடு
/
94ஏ அண்ணா நகர் வருவதில்லை; கலெக்டரிடம் மக்கள் முறையீடு
94ஏ அண்ணா நகர் வருவதில்லை; கலெக்டரிடம் மக்கள் முறையீடு
94ஏ அண்ணா நகர் வருவதில்லை; கலெக்டரிடம் மக்கள் முறையீடு
ADDED : செப் 27, 2025 12:48 AM

கோவை; தொண்டாமுத்துார் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், பஸ் வசதி கோரி, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
தொண்டாமுத்துாருக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். ஒரு நாளைக்கு 7 முறை மட்டுமே பஸ் வருகிறது. காலை 10.30 முதல் மாலை 3.30 மணி வரை மற்றும் மாலை 5.20 முதல் இரவு 9:00 மணி வரை பஸ் வசதி கிடையாது.
தொடர் கோரிக்கைகளை அடுத்து, இருமுறை பஸ் வசதி தரப்படுகிறது. வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் பஸ் வசதி இன்றி பாதிக்கப்படுகிறோம். கெம்பனுார் சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. வழியில் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அண்ணா நகரில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள கெம்பனுாருக்கு 17 முறை பஸ் வந்து செல்கிறது. அந்த பஸ்களை அண்ணா நகர் வரை நீட்டித்தால், பள்ளி, கல்லுாரி, வேலைக்குச் சென்று திரும்புவோர் என, அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருக்கும்.
94ஏ பஸ் இரவு 8.30 மணிக்கு, கெம்பனுார் அண்ணா நகருக்கு வராமல் செல்கிறது. இந்த பஸ் இரவு நேரத்திலும், கெம்பனுார், அண்ணா நகர், அட்டுக்கல் வரை சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.