/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா
/
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா
கதிர் இன்ஜினியரிங் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 29, 2024 12:26 AM
கோவை:கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் இன்ஜினியரிங் கல்லுாரியில், 9வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சைமா தலைவர் சுந்தர்ராமன் பேசியதாவது:
பட்டம் பெற்ற உங்களுக்கு சவால்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு செயலிலும் அவசரம் காட்டாமல், நிதானமாக செயல்பட வேண்டிய தருணம் இது.
15 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஒவ்வொரு ஆண்டும் வெளியே வந்தாலும், வேலை பெற தகுதியானவர்கள், 2.5 லட்சம் பேர் மட்டுமே.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால், தீயதை விட்டு, விலகி விட வேண்டும். அதுதான் சுய கட்டுப்பாடு; சுய ஒழுக்கம். நல்லதை பெற தடைபடுத்தும் மனதை, புறந்தள்ள வேண்டும்.
ஆசையை அடக்கி, நீண்ட கால இலக்கில் திருப்திபட நினைக்கும் மனம் வேண்டும். அப்போதுதான் வெற்றியை தொடர்ந்து பெற முடியும், என்றார்.
விழாவிற்கு, கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் தலைமை வகித்தார். செயலாளர் லாவண்யா முன்னிலை வகித்தார். முதல்வர் உதயக்குமார் நன்றி தெரிவித்தார்.