sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துதிக்கை இல்லாத குட்டியானை தாயுடன் நம்பிக்கையாக உலா

/

 துதிக்கை இல்லாத குட்டியானை தாயுடன் நம்பிக்கையாக உலா

 துதிக்கை இல்லாத குட்டியானை தாயுடன் நம்பிக்கையாக உலா

 துதிக்கை இல்லாத குட்டியானை தாயுடன் நம்பிக்கையாக உலா


ADDED : மார் 22, 2026 05:30 AM

Google News

ADDED : மார் 22, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: அதிரப்பள்ளி அருவி அருகே, துதிக்கை இல்லாத குட்டி யானையை, தாய் யானை அரவணைத்து செல்லும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

வால்பாறை அருகே, கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். அருவி அருகே வனப்பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக துதிக்கை இல்லாத குட்டி யானை, யானை கூட்டத்துடன் உலா வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் குட்டி யானை, தாய் யானையுடன் வனத்தில் உணவு தேட நடந்து செல்லும் காட்சியை வனத்துறையினர் படம் பிடித்துள்ளனர்.

அதிரப்பள்ளி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'துதிக்கை இல்லாத குட்டி யானைக்கு, உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தாய் யானை உதவியுடன் நாள் தோறும் உணவு உட்கொள்கிறது. ஆரம்பத்தில் சோர்வாக காணப்பட்ட குட்டி, தற்போது தாயின் அரவணைப்பில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறது. இந்த யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us