/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவரிடம் ரூ.1.50 கோடி மோசடி; மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
/
முதியவரிடம் ரூ.1.50 கோடி மோசடி; மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
முதியவரிடம் ரூ.1.50 கோடி மோசடி; மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
முதியவரிடம் ரூ.1.50 கோடி மோசடி; மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 01, 2024 01:16 AM
கோவை;முதியவரிடம், ரூ.1.50 கோடி மோசடி செய்த மூவர் மீது கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை கணபதி இரான்தோட்டம் சக்தி நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 64. இவரது உறவினர் ரத்தினபுரியை சேர்ந்த செல்வராஜ். இவரது மனைவி சண்முகசுந்தரி. சண்முகசுந்தரியின் சகோதரி கற்பகம்.
செல்வராஜ், கோவை மாநகராட்சியில் கான்ட்ராக்ட் எடுத்து பணி செய்து வருகிறார். இவர் கடந்த, 2017ம் ஆண்டு தொழில் அபிவிருத்திக்காக தனது வீட்டின் பத்திரத்தை வேலுச்சாமியிடம் கொடுத்து ரூ.50 லட்சம் பெற்றார்.
தொடர்ந்து ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். கடந்த, 2020 முதல், 2022ம் ஆண்டு வரை செல்வராஜ், அவரது மனைவி சண்முகசுந்தரி, அவரது சகோதரி கற்பகம் ஆகியோர் ரூ.75 லட்சம் கடன் பெற்றுள்ளனர். அப்போது தான் ஈடாக வைத்துள்ள வீட்டின் பத்திரத்தை கொடுத்தால் வங்கியில் கடன் பெற்று வேலுச்சாமியின் மொத்த பணத்தையும் திருப்பி தருவ தாக உறுதியளித்தார்.
இதை நம்பி வேலுச்சாமி வீட்டு பத்திரத்தை வழங்கினார். இந்நிலையில், அசல், வட்டி கொடுக்காத நிலையில் மூவரும் ஈடாக அளித்த சொத்தை ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதுகுறித்து கேட்ட போது, அவர்கள் மூன்று காசோலைகளை அளித்தனர். அவற்றை வங்கியில் செலுத்திய போது அவை பணம் இன்றி திரும்பின. இதுகுறித்து வேலுச்சாமி புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

