/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் தப்பியது
/
வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் தப்பியது
வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் தப்பியது
வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் தப்பியது
ADDED : மார் 07, 2024 11:30 AM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் வெள்ளிப்பாளையம் பகுதி உள்ளது.
இதன் அருகில் உள்ள சென்னாமலை கரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டிற்கு முன் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி சிறுத்தை தாக்கி இறந்தது.
இதையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் மற்றும் அவரது தலைமையிலான, வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சிறுத்தையின் நடமாட்டம் தெரிந்ததை அடுத்து, அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து அங்கு கூண்டு வைக்கப்பட்டது. அதே கூண்டில் ஆடு ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளது. கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்த சிறுத்தை, கடந்த 2 நாட்களுக்கு முன் கூண்டில் இருந்த ஆடு சத்தத்தை கேட்டு வந்தது.
ஆனால் கூண்டிற்குள் செல்லாமல் சிறுத்தை அலர்ட் ஆனது. மீண்டும் வனத்திற்குள் சென்றது. அதன் பின் சிறுத்தை அங்கு வரவில்லை. இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்ததை அடுத்து, அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. கூண்டில் ஆடு கட்டப்பட்டுள்ளது.
கூண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் சிறுத்தையின் கால் தடம் உள்ளது. தொடர்ந்து சிறுத்தையின் கால் தடம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம். இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வரவேண்டாம்,'' என்றார்.---

