ADDED : செப் 28, 2026 10:55 PM
கோவை: முழு உடல் பரிசோதனை என்பது ரத்தப் பரிசோதனை மட்டுமல்ல. இருதயம், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, சிறுநீரகம் ஆகிய உடல்நலத்தை முழுமையாக மதிப்பிடும் பரிசோதனையாகும் என்கிறார், ஆர்.எஸ்.புரம் ‘கார் டியா 360’ ெஹல்த்கேர் சென்டரை சேர்ந்த டாக்டர் பிரேம் கிருஷ்ணா.
அவர் கூறியதாவது:
20 முதல் 30 வயதினர், 2–3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையும் பரிசோதனை செய்வது அவசியம்.
30 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்யலாம். இதன் மூலம் நாளை வரும் மாரடைப்பை தடுக்கலாம்.
பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறியப்படும் பிரச்னைகளுக்கு, கார் டியா 360 டிகிரி மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. உலக இதய தினத்தில், உடல்நலப் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
