/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டுச்சாணம் தட்டுப்பாடு கைகொடுக்கும் சனப்பு பயிர்
/
மாட்டுச்சாணம் தட்டுப்பாடு கைகொடுக்கும் சனப்பு பயிர்
மாட்டுச்சாணம் தட்டுப்பாடு கைகொடுக்கும் சனப்பு பயிர்
மாட்டுச்சாணம் தட்டுப்பாடு கைகொடுக்கும் சனப்பு பயிர்
ADDED : ஜன 20, 2026 05:08 AM
மேட்டுப்பாளையம்: இயற்கை உரமான மாட்டு சாணம், போதிய அளவு கிடைக்காததால், விவசாயிகள் சனப்பு பயிரை பயிர் செய்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு விவசாயிகளும், உழவு மாடுகளையும், பசு மாடுகளையும் வளர்த்து வந்தனர். இதன் சாணம் விவசாய நிலத்திற்கு இயற்கை உரமாக, பயன்படுத்தி வந்தனர். விவசாயத்தில் நவீன வளர்ச்சி, உழவுக்கு டிராக்டர், தீவன பற்றாக்குறை ஏற்பட்டதால், உழவு மாடுகளை விவசாயிகள் வளர்ப்பதை தவிர்த்தனர்.
இதனால் இயற்கை உரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. பயிர்கள் நன்கு வளர்வதற்கும், மகசூல் அதிகரிக்கவும், செயற்கை உரங்களை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணில் இயற்கையாக உள்ள, சத்துக்கள் அனைத்தும் செயல் இழந்துள்ளது. மாட்டு சாணம் இல்லாததால் விவசாயிகள், சனப்பு பயிரையும், தட்டை பயிர் செடியையும் இயற்கை உரத்திற்காக பயிர் செய்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
உழவு மாடுகள் வளர்க்காததால், ஒவ்வொரு விவசாயிக்கும் இயற்கை உரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நிலத்தில் ஒரு பயிர் அறுவடை முடிந்த பின், இயற்கை உரத்திற்காக, சனப்பு பயிர் செய்கின்றனர். இந்த பயிரில் பூக்கள் பூக்க தொடங்கியதும், நிலத்தில் டிராக்டர் விட்டு சனப்புடன் உழவு செய்ய வேண்டும். மண்ணுடன் சனப்பு பயிர் இருக்கும் போது, அது நல்ல இயற்கை உரமாக மாறுகிறது. காரமடை பகுதியில் அதிகளவில் விவசாயிகள் சனப்பை பயிர் செய்துள்ளனர்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

