/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு
/
விபத்துக்கு வழிவகுக்கும் உருக்குலைந்த ரோடு
ADDED : டிச 27, 2025 07:01 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி வழித்தடத்தில், டி.கோட்டாம்பட்டி அருகே ரோடு மோசமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி - பணிக்கம்பட்டி வழித்தடத்தில், டி.கோட்டாம்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் சென்று வருகின்றனர். தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் இந்த ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி அருகே, பள்ளம் ஏற்பட்டுள்ளதால், விபத்துக்கு வழிவகுக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, அவ்வப்போது, கழிவுநீர் வெளியேறுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஆள் இறங்கும் குழி அருகே ரோடு உருக்குலைந்து பள்ளமாக மாறி, விபத்து பகுதியாக உள்ளது.
இந்த ரோட்டில் மூன்று இடங்களில், பெரிய பள்ளம் இருப்பதால் வாகனங்களில் வருவோர் கவனமின்றி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
இவ்வழியாக செல்லும் முதியோர், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

