/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை உபாதை கழிக்க அவஸ்தை இல்லையே ஒரு நல்ல கழிப்பறை
/
இயற்கை உபாதை கழிக்க அவஸ்தை இல்லையே ஒரு நல்ல கழிப்பறை
இயற்கை உபாதை கழிக்க அவஸ்தை இல்லையே ஒரு நல்ல கழிப்பறை
இயற்கை உபாதை கழிக்க அவஸ்தை இல்லையே ஒரு நல்ல கழிப்பறை
ADDED : டிச 06, 2025 06:01 AM

தொண்டாமுத்தூர்: மாதம்பட்டி பேரூராட்சி நிர்வாகம், தங்கள் பகுதியில் எவ்வித சுகாதார பணிகளையும் மேற்கொள்வதில்லை என, அம்பேத்கர் காலனி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, மாதம்பட்டி, அம்பேத்கர் காலனியில், சுமார், 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், எங்கு நோக்கினாலும், குப்பை, கழிவுநீர் தேங்கியிருப்பது, சுத்தம் செய்யப்படாத பொதுக்கழிப்பிடம், சிறு கழிவுநீர் சாக்கடை கால்வாய் என, தூய்மை என்பது பெயரளவில் கூட இல்லாத நிலை உள்ளது. தங்கள் பகுதியை, ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில், 6 மாதங்களாகவே, சரிவர குப்பை எடுப்பதில்லை. பள்ள ஓடையில் குப்பை குவிந்துள்ளது. பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதியில்லை. இங்குள்ள பொதுக்கழிப்பறையை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், உள்ளே நுழைய முடிவதில்லை. புதர் மண்டி உள்ளது. கழிவுநீர் சாக்கடை தூர்வாருவதே கிடையாது. நாங்கள், பல முறை புகார் அளித்தால் மட்டும், பெயரளவிற்கு சுத்தம் செய்து, போட்டோ எடுத்து சென்றுவிடுகிறார்கள். பெண்கள், திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள்' என்றனர்.

