/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எட்டாண்டுகளாக காத்திருந்த பெண்ணுக்கு காத்திருக்கு வீடு
/
எட்டாண்டுகளாக காத்திருந்த பெண்ணுக்கு காத்திருக்கு வீடு
எட்டாண்டுகளாக காத்திருந்த பெண்ணுக்கு காத்திருக்கு வீடு
எட்டாண்டுகளாக காத்திருந்த பெண்ணுக்கு காத்திருக்கு வீடு
ADDED : மே 19, 2025 11:29 PM
கோவை; எட்டு ஆண்டுகளாக வீடு கேட்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த பெண்ணுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக, வீடு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
'எட்டு ஆண்டுகளாக வீடு கேட்டு அலைகிறார் இளம்பெண்' என்ற தலைப்பில், கடந்த 7ம் தேதியன்று, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, கணவனை இழந்த அந்த இளம் பெண்ணின் விண்ணப்பத்தை, தேடி எடுத்த அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் வாயிலாக, விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்பு வருவாய்த்துறை அதிகாரிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு, விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்பினர்.
தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இளம்பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.