/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய வாகனத்தில் மன்னீஸ்வரர் உலா தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஜன 06, 2025 01:38 AM

அன்னுார், ; அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், சூரிய வாகனத்தில், சுவாமி திருவீதியுலா நேற்று நடந்தது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், 25ம் ஆண்டு தேர்த் திருவிழா, கடந்த 3ம் தேதி கிராம சாந்தி மற்றும் தேவதை வழிபாடுடன் துவங்கியது.
நேற்றுமுன்தினம் காலை 6:30 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை 7:30 மணிக்கு, சூரிய வாகனத்தில், அருந்தவச் செல்வி உடன்மர் மன்னீஸ்வரர், ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, கடைவீதி வழியாக திருவீதியுலா வந்தார். காலை 10:00 மணிக்கு, மீண்டும் தேர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு, வள்ளி முருகன் கலைக்குழுவின், வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.
நாளை (7ம் தேதி) இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில், செண்டை மேளம், நாதஸ்வரம், வாணவேடிக்கை மற்றும் ஜமாப்புடன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 10ம் தேதி தேரோட்டம் நடக்கின்றன.