/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகவான் ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
பகவான் ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகவான் ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகவான் ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 16, 2024 10:38 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கட்டப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று அதிகாலை, 4.00 மணிக்கு ரஞ்சனி மகேஷ் குழுவினரின் வீணை இசையும், பெரியநாயக்கன்பாளையம் பஜனைக்குழு, குருசுவாமி குழு மற்றும் நாயக்கன்பாளையம் பஜனை குழுக்களின் நாம சங்கீர்த்தனங்கள் நடந்தன.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் சர்வதேச ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தர் தலைமையில் நேற்று காலை, 6.30 மணிக்கு நடந்தது. பின்னர் சுவாமி ஆத்மகனாந்தரின் பஜனை நடந்தது.
தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர் பேசினார். விழா மலர் வெளியிடுதல், கட்டடவியலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வித்யாலய அன்பர்களை கவுரவித்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 1.00 மணிக்கு அன்னதானமும், 2.00 மணிக்கு செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. 'ராமகிருஷ்ண இயக்கம் அனைவருக்கும் ஓர் அடைக்கலம்' என்ற தலைப்பில் மைசூரு ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவர் சுவாமி முக்திதானந்தரும், 'அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்' என்ற தலைப்பில் மூத்த துறவி சுவாமி சர்வரூபானந்தரும், 'வீர துறவி' என்ற தலைப்பில் சென்னை குடந்தை சத்யாவும் பேசினர். மாலை, 6:00 மணி முதல் திருப்புகழ் இசை பஜனை மற்றும் மாணிக்கவாசகர், ராமகிருஷ்ணரின் காளிதரிசனம் தலைப்புகளில் நாடகங்கள் நடந்தன.
இன்று புதன்கிழமை காலை, 6.00 மணிக்கு நாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் திவ்ய பிரபந்த இசையும், நிவேதிதா சிறுமியர் சங்கத்தின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணமும், வித்யாலயா இசை ஆசிரியர்களின் பஜனையும் நடக்கிறது.
காலை, 9.00 மணிக்கு, 'சுவாமி விவேகானந்தர்' என்ற தலைப்பில் கொல்கத்தா ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் சுவாமி ஆத்மபிரியானந்தரும், 'சமுதாய வளர்ச்சியில் கோவில்களின் பங்கு' என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ண ஜெகநாதன் பேசுகின்றனர்.
இதையடுத்து, 'தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் கருணை' என்ற தலைப்பில் கிருஷ்ணமூர்த்தியின் ஹரி கதை நடக்கிறது. புதிய கோவிலில் காலை, 8.00 மணி முதல் மதியம், 1.00 மணி வரை சண்டி ஹோமம் நடக்கிறது.

