/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நள்ளிரவில் நாயை தேடி வந்த சிறுத்தை; 'டார்ச் லைட்' அடித்து விரட்டினர்
/
நள்ளிரவில் நாயை தேடி வந்த சிறுத்தை; 'டார்ச் லைட்' அடித்து விரட்டினர்
நள்ளிரவில் நாயை தேடி வந்த சிறுத்தை; 'டார்ச் லைட்' அடித்து விரட்டினர்
நள்ளிரவில் நாயை தேடி வந்த சிறுத்தை; 'டார்ச் லைட்' அடித்து விரட்டினர்
ADDED : ஜூலை 22, 2025 10:08 PM
வால்பாறை; வால்பாறை அருகே, நாயை தேடி வந்த சிறுத்தையை, தம்பதியினர் 'டார்ச் லைட்' அடித்து விரட்டினர்.
வால்பாறை அடுத்துள்ள கல்யாணப்பந்தல் எஸ்டேட்டில், நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது, சி.டி.ஆர்., எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றும் ராமகிருஷ்ணன், மனைவி ருக்மணி உடன் வீட்டினுள் இருந்துள்ளார்.
வீட்டில் இருந்த நாயை தேடி வந்த சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்தது. இருளில் என்ன சப்தம் என தெரியாமல், சிறிது நேரம் காத்திருந்த பின், 'டார்ச் லைட்' அடித்து பார்த்த போது, சிறுத்தை நாயை கவ்வி செல்ல முற்பட்டது.
உடனே, இருவரும் கூச்சலிட்டு, சிறுத்தையின் முகத்துக்கு 'டார்ச் லைட்' அடித்தவுடன், வீட்டினுள் இருந்து சிறுத்தை வெளியேறியது. நள்ளரவில் சிறுத்தை புகுந்த சம்பவத்தில் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். நாயை பிடிக்க வீட்டிற்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், பூனை, மாடு போன்றவைகளை வளர்க்க கூடாது என பல முறை எச்சரித்துள்ளோம்.
ஆனாலும், யாரும் கண்டு கொள்வதில்லை. சிறுத்தை நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில், வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவற்றை அடைத்து வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் வளர்ந்துள்ள புதரை அகற்ற வேண்டும். மாலை மற்றும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

