/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 'பாடம்'
/
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 'பாடம்'
ADDED : செப் 20, 2024 10:32 PM

வடவள்ளி : வடவள்ளியில், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாநகர போக்குவரத்து போலீசார், உயிர் அமைப்பு மற்றும் பாரதியார் பல்கலை., மாணவர்களுடன் இணைந்து, வடவள்ளி ரவுண்டானா பகுதியில், நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு நடத்தினர்.
இதில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து, போலீசார் அபராதம் விதித்தனர்.
ஹெல்மெட் அணிந்து செல்வதால், உயிரிழப்புகள் தடுக்கப்படுவதோடு, குடும்பங்களும் சிரமத்திற்குளாவதும் தவிர்க்கப்படுகிறது என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலை., மாணவர்கள், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை கையில் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், போக்குவரத்து எஸ்.ஐ., ராஜாமணி, சிறப்பு எஸ்.ஐ., பிரசாந்த், தலைமை காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாணவர்கள் பலர், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.