/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
ADDED : மார் 05, 2024 09:01 PM
அன்னுார்:பா.ஜ., சார்பில், நீலகிரி தொகுதி வேட்பாளருக்கான கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
தமிழக பாரதிய ஜனதா சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள, 39 தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளிடம், வேட்பாளர் தேர்வு குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது.
நீலகிரி தொகுதிக்கு, சமவெளியில் உள்ள அவிநாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் அன்னுார் அருகே புளியம்பட்டியில் தனியார் மண்டபத்தில் நேற்று மதியம் நடந்தது.
மேலிட பார்வையாளர் பொன் சரவணன் நிர்வாகிகளிடம் கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக பெற்றார். இந்நிகழ்ச்சியில் மூன்று தொகுதிகளுக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், அணிகளின் மாநில நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி தலைவர்கள், வட்டார தலைவர்கள், வட்டார பார்வையாளர்கள் என 150 பேர் பங்கேற்றனர்.
அவர்களிடம் நீலகிரி தொகுதியில் போட்டியிட பரிந்துரைக்கும் தலா மூன்று பேர்கள் பெயர் அடங்கிய கடிதம் பெறப்பட்டது. நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் உடனடியாக மாநில தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கருத்து கேட்பு நிகழ்ச்சியில், பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி தொகுதி இணை அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

