/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீடம்பள்ளியில் புதிய கூடைப்பந்து மைதானம்
/
பீடம்பள்ளியில் புதிய கூடைப்பந்து மைதானம்
ADDED : செப் 11, 2024 12:14 AM

கோவை:பீடம்பள்ளி, ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில், புதிய கூடைப்பந்து மைதானம் துவக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய கூடைப்பந்து விளையாட்டு நடுவர் ராஜன் வெள்ளிங்கிரிநாதன், ரிப்பன் வெட்டி முதல் பந்து சேவையை தொடங்கி வைத்தார். பின், ''விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்களின் உடல் நலமும், மனநலமும் சிறந்து விளங்கும்,'' என்று பேசினார்.
பள்ளி தாளாளர் நாகராஜன் பேசுகையில், ''இந்த கூடைப்பந்து மைதானம் வரும் தலைமுறையினர் பல தடகள சாதனைகள் புரிவதற்கான, ஒரு மையமாக மாற வேண்டும்,'' என்றார்.
பள்ளியின் பொறுப்பாளர் அபிராமி, பள்ளி, கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.