தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சத்தான பாரம்பரிய உணவு ரத்தசோகைக்கு 'செக்' வைக்கிறது

சத்தான பாரம்பரிய உணவு ரத்தசோகைக்கு 'செக்' வைக்கிறது

சத்தான பாரம்பரிய உணவு ரத்தசோகைக்கு 'செக்' வைக்கிறது


UPDATED : நவ 28, 2026 04:52 PM

ADDED : நவ 28, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 04:52 PM ADDED : நவ 28, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரத்தசோகை இல்லா கிராமங்களை உருவாக்கும் நோக்கில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட அளவிலான பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் சிறுதானிய போட்டி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மகளிர் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், ஊராட்சி அளவில் 1,040 குழுக்கள் பங்கேற்றன. 228 குழுக்கள் வட்டார அளவிலான போட்டிக்கு தேர்வு செய்து, அவற்றில் 12 குழுக்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.

போட்டியில், பாரம்பரிய உணவு முறையில் தயாரிக்கப்பட்ட நவீன உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறுதானிய சாக்லெட் பிரவுனி, நாட்டு பழ இனிப்பு டிக்கா, பீட்ரூட் சப்பாத்தி, சிறுதானிய லட்டு, கொள்ளு துவையல், புட்டு உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றன.

'ஒரு ஊராட்சியில் குறைந்தது 5 குழுவினர் வரை போட்டியில் பங்கேற்றனர். ஒரு குழுவில் 12 பேர் வீதம், குறைந்தது 60 பேர் பங்கேற்றனர்.

சுல்தான்பேட்டை வட்டார குழு முதல் பரிசையும், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் அடுத்தடுத்த பரிசையும் பெற்றன. ஆறுதல் பரிசுகள் சூலூர், பொள்ளாச்சி வடக்கு வட்டார குழுக்களுக்கு வழங்கப்பட்டன.

மகளிர் திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் தாரணி, மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜோசப் ரத்தின ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us