/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ. உத்தரவு அமலாகவில்லை வடக்கலுாரில் ஒரு தரப்பினர் புகார்
/
ஆர்.டி.ஓ. உத்தரவு அமலாகவில்லை வடக்கலுாரில் ஒரு தரப்பினர் புகார்
ஆர்.டி.ஓ. உத்தரவு அமலாகவில்லை வடக்கலுாரில் ஒரு தரப்பினர் புகார்
ஆர்.டி.ஓ. உத்தரவு அமலாகவில்லை வடக்கலுாரில் ஒரு தரப்பினர் புகார்
ADDED : அக் 12, 2025 11:09 PM
அன்னுார்:'ஆர்.டி.ஓ., உத்தரவு அமலாக வில்லை' என வடக்கலூரில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்
வடக்கலூரில் காதல் திருமணம் செய்த 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக முதல்வர் மற் றும் கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப் பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உரிய தீர்வு காணும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது. இதில் 'கோவில் திருவிழாவில் ஒரு தரப் பினரை ஒதுக்க கூடாது. இணைந்து செயல்பட வேண்டும். மீறி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஆர். டி.ஓ., எச்சரித்தார்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்த தரப்பினர் கூறுகை யில், ' புரட்டாசி திருவிழா நேற்று முன்தினம் நடந் தது. ஆனால் எங்கள் தரப்பினரை அழைக்கவில்லை. எங்களை புறக்கணிக்கின்றனர். ஆர்.டி. ஓ., உத்தரவின் படி கமிட்டி ஏற்படுத் தவில்லை. தன்னிச்சையாக கோவில் திருவிழா நடத் தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை மற் றும் வருவாய் துறையிடம் புகார் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.