/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்! கொண்டைஊசி வளைவில் விபத்து அபாயம்
/
மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்! கொண்டைஊசி வளைவில் விபத்து அபாயம்
மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்! கொண்டைஊசி வளைவில் விபத்து அபாயம்
மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்! கொண்டைஊசி வளைவில் விபத்து அபாயம்
ADDED : ஜன 30, 2025 11:12 PM

வால்பாறை: வால்பாறை, கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே அமைக்கப்பட்ட குவி கண்ணாடிகள் மாயமானதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வரையாடு, சிங்கவால்குரங்கு, யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இது தவிர எண்ணற்ற பறவைகளும் உள்ளன.
இந்நிலையில், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் நடமாடும் வனவிலங்குகளையும் சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆழியாறில் இருந்து வால்பாறை வரையிலான, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், குவி கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே ஏற்படும் விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. மலைப்பாதையில் வைக்கப்பட்ட குவி கண்ணாடியால் வாகன ஓட்டுநர்களும், விபத்தில்லாமல் தங்களது வாகனங்களை இயக்கினர்.
இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வழியில், கொண்டைஊசி வளைவுகளில் வைக்கப்பட்ட மூன்று குவி கண்ணாடிகள் மாயமாகியுள்ளன. இதனால், மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாயமான குவி கண்ணாடிகளை உடனடியாக பொருத்த வேண்டும், என்பது, வாகன ஓட்டுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மலைப்பாதையில் விபத்து ஏற்படாமல் இருக்க, தற்போது ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. கொண்டைஊசி வளைவுகளிடையே அமைக்கப்பட்ட குவி கண்ணாடியால் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதோடு, விபத்தும் ஏற்படாமல் இருந்தது.
வால்பாறைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர் குவி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மீண்டும் அதே இடத்தில் குவி கண்ணாடி விரைவில் பொருத்தப்படும். கண்ணாடிகளை சேதப்படுத்தும் சுற்றுலா பயணியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.