/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்
/
வால்பாறை மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்
ADDED : ஜூலை 24, 2025 08:32 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயமானதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஆழியாறில் இருந்து, வால்பாறை மலைப்பகுதிக்கு செல்லும் வழியில், 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
மலைப்பகுதியில் இயக்கப்படும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகாமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கொண்டை ஊசி வளைவுகளில் குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. கொண்டைஊசி வளைவுகளில் எதிரில் வரும் வாகனங்கள், பார்வைக்கு தெரிவதால், வாகன ஓட்டுநர்களுக்கு பயனாக இருந்தது.
இந்நிலையில், கொண்டைஊசி வளைவுகளில் பொருத்தப்பட்ட, குவி கண்ணாடிகள் சில இடங்களில் மாயமாகி உள்ளன. இதனால், கொண்டைஊசி வளைவுகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, மாயமான பகுதிகளில் மீண்டும் குவி கண்ணாடிகள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சுற்றுலா பயணியர், வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.