/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுப்பதில் முன்னோடி; எஸ்.ஆர்.இ.எஸ்., துணைப்பொதுச்செயலாளர் மணிலால் காந்தி தகவல்

ADDED : நவ 20, 2024 10:42 PM
கோவை ; ''ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக மீட்டெடுப்பதில் முன்னோடியாக இருப்பதால், எங்கள் வெற்றி எளிதானதே,'' என, எஸ்.ஆர்.இ.எஸ்., துணைப்பொதுச்செயலாளர் மணிலால் காந்தி கூறினார்.
இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 10 ஆண்டுகளுக்கு பின், இந்த தேர்தல், வரும், டிச., 4 முதல் 6 ம் தேதி வரை நடக்க உள்ளது. ரகசிய ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, டிச., 12ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ரயில்வே ஊழியர்களிடம் ஆதரவை பெற சங்கங்கள் முயற்சித்து வருகின்றன.
எஸ்.ஆர்.இ.எஸ்., துணைப் பொதுச்செயலாளர் மணிலால் காந்தி கூறியதாவது: கடந்த, 12 ஆண்டுகளாக தேர்தல் இல்லை. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அப்பிரச்னைகளை நேஷனல் பெடரேஷன் ஆப் ரயில்வேமென் சங்க பொதுச்செயலாளர் ராகவையா வாயிலாக ரயில்வே அமைச்சகத்துடன் பேசி தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.
இரு முறை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளோம். முதல் தேர்தலில், டி.ஆர்.யூ., வெற்றி பெற்றது. டி.ஆர்.யூ., தெற்கு ரயில்வே அளவிலேயே பேச முடியும். ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுத்தருவது எங்கள் அமைப்பு தான். இந்த அடிப்படையில் தான் தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம்.
தொழிலாளர்களுக்கு நாங்கள் பெற்றுத் தந்த சலுகைகளை முன்னிறுத்தி ஓட்டு சேகரித்து வருகிறோம். வெற்றி அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுத்தருவதில் முன்னோடியாக இருப்பதால், எங்கள் வெற்றி எளிதானதே. இவ்வாறு, அவர் கூறினார்.