/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த மயானம் சுத்தப்படுத்த கோரிக்கை
/
புதர் சூழ்ந்த மயானம் சுத்தப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 28, 2024 12:25 AM

நெகமம் ; பெரியகளந்தை, நாராயண நாயக்கன்புதூரில் உள்ள மயானம் புதர் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
நெகமம், காட்டம்பட்டியில் இருந்து பெரியகளந்தை செல்லும் ரோட்டில், நாராயண நாயக்கன்புதூரில் மயானம் உள்ளது. இந்த மயானம், பயன்படுத்த முடியாத நிலையில் செடி கொடிகள் படர்ந்தும், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும், மயானத்திற்குள் ஆட்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
கிராமப்பகுதியில் துக்க நிகழ்வு நடந்தால், உடலை இங்கு அடக்கம் செய்ய எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மயான பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'மயானம் சுத்தமாக தான் இருந்தது. சுற்றுச்சுவர் கட்டி பராமரிப்பும் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக முறையான பராமரிப்பு இன்றி, செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
தற்போது, மழை பெய்வதால் மாயானத்தின் நடைபாதையும் சேறும், சகதியாக உள்ளது. இதனால் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. மயானத்தில் வளர்ந்துள்ள புதரை அகற்றி சுத்தம் செய்து, நடைபாதையில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்,' என்றனர்.