/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில் வர்ண ஜாலம்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் அசத்திய வாசகியர்
/
வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில் வர்ண ஜாலம்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் அசத்திய வாசகியர்
வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில் வர்ண ஜாலம்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் அசத்திய வாசகியர்
வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில் வர்ண ஜாலம்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் அசத்திய வாசகியர்
ADDED : டிச 25, 2024 10:31 PM

வடவள்ளி; வீரகேரளத்தில், தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்தும், 'மார்கழி விழாக்கோலம்' கோல போட்டியில், பல்வேறு வண்ணக் கோலங்களிட்டு நம் வாசகியர் அசத்தினர்.
கோவையில், தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து, 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தி வருகிறது.
இதில், கோவையில் உள்ள பல்வேறு அபார்ட்மென்ட்களில் வசிக்கும் பெண்கள், ஆர்வமுடன் பங்கேற்று, ரங்கோலி, புள்ளி கோலங்களை வண்ணமயமாக வரைந்து, பரிசு பெற்று செல்கின்றனர்.
கோவை, வீரகேரளம், பெரிய தோட்டம் காலனியில் உள்ள வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில், நேற்று கோலப்போட்டி நடந்தது.
20க்கும் மேற்பட்ட பெண்கள், ரங்கோலி மற்றும் புள்ளி கோலங்களை போட்டு அசத்தினர். பலரும், ரங்கோலி கோலங்களை தேர்வு செய்து, வண்ணங்களால் பிரமிக்க வைத்தனர்.
இதில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை குறிக்கும் வகையில் கோலங்களை வரைந்தனர்.
குறிப்பாக, 'அன்பால் இணைவோம்; அகிலத்தை ஆள்வோம்' என்ற கருத்தில் வரையப்பட்ட புள்ளி கோலம், தியானம் செய்யும் சிவன், சமூக வலைதளங்களில் மூழ்கி அடிமையாவதை தவிர்த்து, புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வரையப்பட்ட ரங்கோலி கோலங்கள், 77 வயது மூதாட்டி சொர்ணாம்பாள், நவ கிரகங்களை மையமாக கொண்டு வரைந்த கோலம் உள்ளிட்டவை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புள்ளிக்கோலத்தில், சுதா ராணி, சிவகாமி, சவுமியா ஆகியோரும், ரங்கோலி கோலத்தில், மங்கையர் திலகம், கிருத்திகா, சஞ்சனா ஆகியோரும் பரிசு பெற்றனர்.
இந்த, 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டியை, அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீ பேபி பிராப்பர்டீஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.
இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்ட் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.