sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாலி ரோடு சந்திப்பில் வருகிறது 'ரவுண்டானா' சாலை பாதுகாப்பு நிதியில் அமைகிறது

/

லாலி ரோடு சந்திப்பில் வருகிறது 'ரவுண்டானா' சாலை பாதுகாப்பு நிதியில் அமைகிறது

லாலி ரோடு சந்திப்பில் வருகிறது 'ரவுண்டானா' சாலை பாதுகாப்பு நிதியில் அமைகிறது

லாலி ரோடு சந்திப்பில் வருகிறது 'ரவுண்டானா' சாலை பாதுகாப்பு நிதியில் அமைகிறது


ADDED : பிப் 22, 2024 06:10 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சாலை பாதுகாப்பு நிதியில், கோவை லாலி ரோடு சந்திப்பில், 'ரவுண்டானா' அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

கோவை - தடாகம் ரோடு, மருதமலை ரோடு, கவுலி பிரவுன் ரோடு ஆகிய மூன்று ரோடுகள் லாலி ரோடு சிக்னலில் சந்திக்கின்றன.

தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, மேம்பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வந்தது. இதற்காக, இரு வழித்தடங்களிலும் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.

இறுதியாக, மருதமலை ரோட்டில் இருந்து, கவுலி பிரவுன் ரோட்டை இணைக்கும் வகையில், உத்தேச மதிப்பீடாக ரூ.120 கோடியில், நான்கு வழி மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், 'மெட்ரோ ரயில்' திட்டம், மத்திய - மாநில அரசுகளின் பரிசீலனையில் இருப்பதால், புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு, தடையின்மை சான்று பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதனால், மேம்பாலம் கட்டும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே தற்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

லாலி ரோடு சந்திப்பில், சிக்னல் முறையை அகற்றி, 'யூ டேர்ன்' வசதியை அறிமுகப்படுத்தினர். இது, வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. வாகனங்கள் காத்திருக்காமல் சீராக செல்ல முடிவதால், நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சாலை பாதுகாப்பு நிதியில், சாலை சந்திப்புகளில் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, ஒரு கோடியே, 24 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், 10 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்கட்டமாக, லாலி ரோடு சந்திப்பில், 'ரவுண்டானா' அமைக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது.

எந்தெந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள்?


மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சாலை சந்திப்பு; கவுண்டம்பாளையத்தில் சாலை சந்திப்பு; திருச்சி ரோட்டில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில்; பெர்க்ஸ் பள்ளி சந்திப்பு, சிங்காநல்லுார் சந்திப்பு; சுங்கம் பகுதியில் சாலை சந்திப்பு; அவிநாசி ரோட்டில் ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு; லட்சுமி மில்ஸ் சந்திப்பு; நவ இந்தியா சாலை சந்திப்பு; மருதமலை ரோடு மற்றும் லாலி ரோடு சந்திப்பு பகுதிகளில், அபிவிருத்தி பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us