/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பேரூரில் சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும்'
/
'பேரூரில் சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும்'
'பேரூரில் சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும்'
'பேரூரில் சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும்'
ADDED : மார் 04, 2026 05:09 AM

தொண்டாமுத்தூர்: சாந்தலிங்க அடிகளார் குருபூஜை விழா மற்றும் சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் 112ம் ஆண்டு விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நடந்தது.
காலை 8:00 மணிக்கு, அருள்நெறி கொடி ஏற்றப்பட்டது. 9:00 மணிக்கு, திருமுறை வேள்வி நடந்தது. அம்பலவாணர் திருமஞ்சனம், சாந்தலிங்க பெருமான் திருமஞ்சனமும், பேரொளி வழிபாடு மற்றும் அன்னம்பாலிப்பும் நடந்தது.
பகல் 3:00 மணிக்கு, சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் 112ம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு லலிதாம்பிகை பீட சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி தலைமை வகித்தார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட, 112 பேர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில், லலிதாம்பிகை பீட சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசியதாவது:
இறைவனை அறிந்து கொள்வதற்காகத்தான், வேதங்கள், சாஸ்திர நூல்கள், திருமுறை, தேவாரம், திருவாசகம், சிவபுராணம் இருக்கின்றன.
இவற்றை தேடி இன்று லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள், நம் நாட்டை நோக்கி வருகிறார்கள். எனவே, பேரூர் ஆதின மடத்தில், சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும். அதற்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை ஏற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

