/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணபதியில் குடிநீர் குழாய் பதித்த இடத்தில் சிக்கிய பள்ளி வாகனம்
/
கணபதியில் குடிநீர் குழாய் பதித்த இடத்தில் சிக்கிய பள்ளி வாகனம்
கணபதியில் குடிநீர் குழாய் பதித்த இடத்தில் சிக்கிய பள்ளி வாகனம்
கணபதியில் குடிநீர் குழாய் பதித்த இடத்தில் சிக்கிய பள்ளி வாகனம்
ADDED : மார் 07, 2024 03:48 AM

கோவை : கணபதியில் குடிநீர் குழாய் பதித்த இடத்தில் பள்ளி வேன் சிக்கிக்கொண்ட விபத்தில், நல்ல வேளையாக குழந்தைகளுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கோவை மாநகராட்சியின் பழைய, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ரோட்டில் குழாய் பதிப்பு, குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடந்துவருகின்றன.
பணிகளில் இழுபறி காரணமாக, பெரும் சிரமங்களை மக்கள் சந்திப்பதாக கவுன்சிலர்கள் குமுறி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் சிக்கி, விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது.
வடக்கு மண்டலம், 25வது வார்டு, கணபதி வ.உ.சி., நகரில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று போலீஸ் குடியிருப்பு செல்லும் வழியில், குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் காலை, 7:00 மணிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்ற பள்ளி வேனும், அடுத்து மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனமும் சிக்கிக்கொண்டன. குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கிரேன் உதவியுடன் வாகனங்களும் மீட்கப்பட்டன.
மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தகுந்த எச்சரிக்கை பலகைகளை நிறுவினால், பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

