/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்தடுத்து திருட்டு, செயின் பறிப்பு; சூலுார் சுற்றுவட்டார மக்கள் அச்சம்

ADDED : அக் 08, 2025 11:33 PM
சூலுார்; சூலுார் அடுத்த அப்பநாயக்கன் பட்டியில், அப்பநாயக்கன்பட்டி புதூர், ராமமூர்த்தி நகர், விஜயலட்சுமி நகர், திருநகர் உள்ளிட்ட இடங்களில் பல குடியிருப்புகள் உள்ளன.
கடந்த இரு நாட்களுக்கு முன், பூட்டியிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடி செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாப்பம்பட்டியில் பால் வாங்க சென்ற ரோஸி என்ற பெண்ணிடம் தங்க செயினை பறித்து மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
பீடம் பள்ளியை சேர்ந்த சம்பூர்ணா என்பவரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் மக்கள் கூறுகையில், 'சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து நடக்கும் திருட்டுகள் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. வீட்டை பூட்டி விட்டு வெளியிலும் செல்லமுடியவில்லை. ரோட்டில் நடந்து செல்லவும் அச்சமாக உள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்' என்றனர்.