/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைகளாக குவியும் குப்பைகளுக்கு குட்பை சொல்ல எளிய தீர்வு
/
மலைகளாக குவியும் குப்பைகளுக்கு குட்பை சொல்ல எளிய தீர்வு
மலைகளாக குவியும் குப்பைகளுக்கு குட்பை சொல்ல எளிய தீர்வு
மலைகளாக குவியும் குப்பைகளுக்கு குட்பை சொல்ல எளிய தீர்வு
ADDED : செப் 30, 2025 10:36 PM
வீ டுகளிலும், கல்லுாரி விடுதிகளிலும், கல்யாண மண்டபங்களிலும், ஓட்டல்களிலும் மட்டுமல்ல, வாரச்சந்தைகளிலும் எண்ணிலடங்கா திடக்கழிவுகள் தினம் தினம் உருவாகின்றன. இவற்றை, மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் தீர்வை தந்துள்ளது அம்மாருண் ஒருங்கிணைந்த பண்ணை.
நகர்ப்புறங்களில் கழிவுகளை அகற்றுவது பெரும் பிரச்னைகளாக உள்ளன. பொது இடங்களில் உள்ள மரங்களிலும், மின் பாதைகளிலும் வெட்டி அகற்றப்படும் கிளைகள் குப்பைகளாகின்றன. இவை தற்போது இயந்திரங்கள் கொண்டு துாள் துளாக்கப்படுகின்றன. இவற்றுடன், வீடுகளிலும், விடுதிகளிலும், கல்லுாரிகளிலும், திருமண மண்டபங்களிலும், ஓட்டல்களிலும் வெளியேற்றப்படும் கழிவுகளும் மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம். இந்த கழிவுகள் தனித்தனியாக பிரித்து அம்மாருண் ஒருங்கிணைந்த பண்ணைக்கு எடுத்து வரப்படுகின்றன.
பசுந்தழைகளும், உணவு பொருட்களும் கால்நடைகளுக்கு உணவாக்கப்படுகின்றன. கால்நடைகளின் சாணத்துடன் பச்சையான, உலர்ந்த, காய்ந்த இலைகள், மீதமாகும் உணவு பொருட்களை சேர்த்து 60 நாட்கள் மக்க வைக்கப்படுகின்றன. இந்த இயற்கை உரம், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரத்தால் பயிர்கள் செழுமையாக வளர்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மறு சுழற்சி முறையால், நகரம் சுத்தமாகிறது; விவசாயம் செழிக்கிறது. சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.
கழிவுகளை அகற்றவும், சேகரிக்கவும் தனித்தனியாக கொடுக்கவும் பாத்திரங்களை அம்மாருண் நிறுவனமே இலவசமாக தருகிறது. அவற்றில் சேகரிக்கப்படும் கழிவுகளை எடுத்துச் செல்லவும் இலவச வாகனத்தையும் அனுப்பி வைக்கிறது. இத்தகைய வசதியை பெற 98433 33948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அம்மாருண் பவுண்டரிஸ் நிறுவனம், மாதந்தோறும் 10,000 டன் பவுண்டரி மணலை சுத்திகரிக்கும் என்விரோ கார்டு இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறது.
அன்னுார் கரியாம்பாளையத்தில் உள்ள இந்த நிறுவனம், 2015 முதல் இதுவரை நாலரை லட்சம் டன் மணலை சுத்திகரித்து சுற்றுச் சூழலை பாதுகாத்துள்ளது. தண்ணீரால் துாய்மைப்படுத்தப்பட்ட மணல், மேலும் பல முறை மீண்டும் மறு சுழற்சி செய்து பவுண்டரிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
கழிவாக கிடைக்கும் மணலை செம்மண் உடன் கலந்து, கடந்த 20 ஆண்டுகளாக பல கோடி செங்கற்களை தயாரித்துள்ளது. செம்மண் தோண்டி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், பிளைஆஷ் பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. நிலக்கரி சாம்பல், குவாரி டஸ்ட், சிமென்ட்டுடன் சிறிது கருப்பு மணல் கலந்து தினமும் 20 ஆயிரம் கற்கள் தயாராகி வருகின்றன. தேவை இருப்பின், 99422 11244, 73730 86661 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இயற்கை வளம் காப்பதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்க செயலாற்றி வரும் இந்த நிறுவனத்துடன் கைகோர்ப்போம்.